போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-04 17:53 GMT

ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் மெயின் அரிமா சங்கம் மண்டபம் வரை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இயங்காத பெட்ரோல் பங்க் மற்றும் ராசிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் நகர போக்குவரத்து போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்