அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை

Update: 2026-01-04 19:09 GMT

கீழ்பென்னாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஆண்கள் பள்ளி ஆகியவைகள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தனியார் பஸ்களை நிறுத்தி அலுவலக பணியாளர்கள், பொதுமக்களை ஏற்றுவதும், இறக்குவதுமாக உள்ளது. இதேபோல் அனைத்து அரசு பஸ்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நிறுத்தி பயணிகள், அலுவலக பணியாளர்களை ஏற்றி, இறக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

-ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்