பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-07-27 19:14 GMT

ஏ20 என்ற அரசு டவுன் பஸ் சில நேரங்களில் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகிறது. அந்தியூர், அத்தாணியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தினமும் ஏராளமான கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக புறநகர் பஸ்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பவானி செல்லும் பஸ்களில் சென்று அத்தாணியில் இறங்கி சத்தியமங்கலத்துக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் அத்தாணியில் இருந்து அந்தியூர் வழியாக பவானிக்கு இயக்கப்படும் ஏ20 அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்