திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வழுதலங்குணம் கிராமத்தில் சிறு மின் விசை குடிநீர் தொட்டி உள்ளது. அது, 2 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ளதால் தண்ணீர் கலங்களாக வருகிறது. குடிநீர் தொட்டியை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளதால் கிராம மக்கள் குடிநீர் எடுத்து வர சிரமப்படுகின்றனர். குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால், அதில் ஏற்றும் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எல்.சரவணன், வழுதலங்குணம்.