கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-05-03 18:50 GMT

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் அதிகளவில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவில் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சுரேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்