வேலூர் சத்துவாச்சாரியில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு சிமெண்டு சாலை அமைக்க பட்டுள்ளது. பூங்கா அருகே இந்த சாலையில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையை விட பள்ளமாக உள்ளது. மேலும் இந்த தொட்டி சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சாலை அளவுக்கு உயர்த்தி சரியாக மூடி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.