ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள தனியார் விடுதி மற்றும் ஓட்டல் முன்பாக கழிவுநீர் அனைத்தும் சாலைகளில் வழிந்தோடுகிறது. ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு ஓட்டல் மற்றும் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கால்வாயில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், சேவூர்.