ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

Update: 2026-05-17 13:45 GMT

கணபதி அத்திப்பாளையம் பிரிவு சிக்னல் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் திறந்த நிலையில் கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து இருக்கும். அந்த வழியாக வரும் வாகனங்கள் திறந்து கிடக்கும் கால்வாயில் இறங்கி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டி மேல் மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்