விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் காளையார் கரிசல்குளம் வடக்குத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதி கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமா?