ஈரோடு பவர் ஹவுஸ் ரோட்டில் கலைமகள் பள்ளி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?