பொங்குபாளையம் ஊராட்சி பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியில், கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை முறையாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.