பவானி நகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட சொக்காரம்மன் காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.