ஆரணியில் ஆரணிபாளையம் கே.கே.நகரில் சீதாராமன் தெருவில் முறையாக பக்க கால்வாய்கள் நகராட்சி சார்பில் அமைக்கப்படாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தி இரவில் மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை வடியவைக்க வேண்டும். எங்கள் பகுதியில் பக்க கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலியபெருமாள், ஆரணிபாளையம்.