குட்டைபோல் தேங்கிய கழிவுநீர்

Update: 2026-01-11 19:10 GMT

வேலூர் கொணவட்டத்தில் வேலூர்-பெங்களூரு செல்லும் சாலையின் அணுகுச்சாலை பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை எனும் நிலையில் திடீரெனக் குட்டை போல் கழிவுநீர் தேங்கியது. இதனால் கலவையைத் தூர்வாரும் பணியும் நடந்தது. ஆனால் மீண்டும் ஏற்பட்ட கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை முறையாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோகுல், வேலூர்.

மேலும் செய்திகள்