வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட, ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிவறைகளுடன் கூடிய சுகாதார வளாகம் பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சுகாதார வளாகத்தின் எதிரிலேயே உள்ள கானாறு கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி உள்ளது. கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் வெளியேற வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜம்புலிங்கம், வேலூர்.