அணைக்கட்டு தாலுகா பொய்கை-பொய்கை மோட்டூர் சாலையில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது. ஆனால், ஒருசில இடங்களில் மழைநீர் கால்வாய்க்கு மூடி போடாமல் திறந்த வெளியாக உள்ளது. அந்த வழியாக செல்லும் முதியவர்கள், சிறுவர், சிறுமிகள் தவறி கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. ஆகவே கால்வாய்க்கு மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.