திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அட்வகேட் ராமநாத நகர் மின்சார சுடுகாடு எதிரே உள்ள தெருப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மழை காரணமாக கழிவுநீர் கால்வாய்களில் இருந்து கழிவுகளை அகற்றி அதன் கரையிலேயே கொட்டினர். இதற்காக கால்வாய் மேல் மூடப்பட்டிருந்த கற்களை அகற்றியிருந்தனர். ஆனால் பணிகள் முடிந்ததும் மீண்டும் கற்களை கொண்டு கால்வாயை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதன்ல் அந்தப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கார்களை வெளிய எடுக்க முடியவில்லை. பலமுறை புகார் மனு கொடுத்தும் நகராட்சி எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.