கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2025-09-28 18:02 GMT

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 30-வது வார்டு பேரி சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவில் மொத்த ஜவுளி, பாத்திரம், வளையல், மின்சாதன பொருட்கள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த தெரு அதிக மக்கள் நடனமாடும் தெருவாகும். அந்தப் பகுதியில் முருகன், ஜெயின், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்தத் தெரு வழியாக 40 தெருக்களின் கழிவுநீர் செல்கிறது. கால்வாய் தூர் வாராததால் லேசான மழைப் பெய்தாலும், எங்கள் தெருவில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி கால்வாயை தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ் ஜெயின், வேலூர். 

மேலும் செய்திகள்