தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2022-09-04 10:33 GMT

வேலூர் சாரதி மாளிகை பின்புறம் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் சமீபத்தில் பெய்த மழைநீர் தெருவில் தேங்கி காணப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மேலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்