ஜோலார்பேட்டை புதுஓட்டல் தெருவு அருகில் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி கடந்த 15 நாட்களாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுஷ்மிதா, ஜோலார்பேட்டை.