ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் முறையாக கால்வாய்கள் அமைக்கப்படாததால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் குட்டைபோல் தேங்கும் அவல நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் முறையாக பக்க கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தண்டாயுதபாணி, ஆரணி.