அணைக்கட்டு தாலுகா பொய்யை ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. மக்கள் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும்.
-பி.சி.சுரேஷ், சமூக ஆர்வலர், பொய்கை.