குளம்போல் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-04-13 14:28 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி பலமுறை எடுத்துக் கூறியும், புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு அவதிப்படுகின்றனர். இதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை. 

மேலும் செய்திகள்