தெருவில்‌ ஓடும் கழிவுநீர்

Update: 2025-02-02 19:58 GMT

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. அங்குள்ள மக்கள் ெதருவில் பள்ளம் தோண்டி கழிவுநீரை தேக்கி வைக்கிறார்கள். அந்தப் பள்ளத்தில் தேங்கும் கழிவுநீர் வழிந்து தெருவில் ஓடுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமமூர்த்தி, கீழ்கிருஷ்ணாபுரம்.

மேலும் செய்திகள்