தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்தில் ஓடை விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மேலும் இந்த நடைபாதையின் வழியாக பொதுமக்கள் செல்லும் போது மண் சரிவு ஏற்பட்டு தவறி சாக்கடையில் விழும் அபாயம் உள்ளது. எனவே தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.