தர்மபுரி-பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலை தொடங்கும் பகுதியில் பட்டர்பிளை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் வந்து செல்லும் பொதுமக்கள், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதியை விரைவாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.