தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தும் இடத்திலேயே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மூக்கை பிடித்தபடியே சென்று வருகின்றனர். பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கிய கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,. பட்டுக்கோட்டை