புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பள்ளத்துவயர் அருகே ஐ.டி.ஐ. காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையிலும், குடியிருப்புகளிலும் தேங்கிநி்ற்பதால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.