ஈரோடு மாநகராட்சி 55-வது வார்டில் உள்ள பிள்ளையார் கோவில் வீதி மற்றும் கருப்பண்ணசாமி கோவில் 2-வது வீதி இணையும் இடத்தில் சாக்கடை கால்வாய் செல்கிறது. ஆனால் இந்த கால்வாய் மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் நிரம்பி வீதியில் ஓடி வருகிறது. இதனால் பொதுமக்களால் நடந்து செல்ல முடிவதில்லை. எனவே கால்வாயை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.