திருச்சி பாரதிதாசன் சாலையில் ரெயில்வே அருங்காட்சியகம் எதிரே எல்.ஐ.சி. அருகே சாலையோரம் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயானது முறையாக தூர்வாரப்படாமலும், தடுப்புச்சுவர் கட்டப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வாகனங்கள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் விழும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கால்வாயை தூர்வாரி, தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.