சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து கோட்டை செல்லும் சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் மீண்டும் சாக்கடை கழிவுநீர் அதே பகுதியில் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.