கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் வடுகன்பற்று கூண்டு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வடக்கு புறமாக அமைந்துள்ள கழிவுநீர் ஓடையை முறையாக பராமரிக்காததால் நிரம்பி சாலையோரம் பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் கழீவுநீர் சாலையில் பாய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.