ஓசூர்-தளி சாலையில் ரெயில்வே கேட் அருகில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அப்பகுதியில் பாதசாரிகளுக்கு நோய் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது. கடந்த ஒரு மாதமாக இந்நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காத வகையில் உடனடியாக கால்வாயை சீரமைக்க வேண்டும்.