சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சில கிராமப்பகுதிகளில் கழிவுநீர் வாறுகாலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சாலையில் பயணிக்க சிரமமாக உள்ளது. எனவே வாறுகாலில் தேங்கிய குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.