சேலம் செவ்வாய்பேட்டை கூட்ஸ்செட் முன்பு சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.