மதுரை கண்ணணேந்தல் சந்தனம் நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி கழிவுநீரை அப்புறப்படுத்தவும், மேலும் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?