அகற்றப்படாத மண் குவியல்

Update: 2026-03-08 13:49 GMT

கோவை ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் இருந்து அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கி இருந்த மண் அகற்றப்பட்டு சாலையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த மண் குவியலை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்