கால்வாயில் அடைப்பு

Update: 2026-03-08 13:47 GMT

கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ஜீவா நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. குடிநீரிலும் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்