ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பல நாட்களாக கழிவுகள் கொட்டப்பட்டு் வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?