விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பாண்டியன் நகர், இந்திராநகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பு இன்றி நீண்டநாட்களாக கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகின்றது. மேலும் அப்பகுதிகளில் குப்பைகளும் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயநிலை நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?