சென்னை அடையாறு, பெசன்ட் நகர் 1-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த சில மாதங்களாக மூடிசேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மூடி இல்லாததால் சாக்கு, மரக்கிளையை வைத்து மூடி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை கடந்து செல்லும்போது அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயின் மூடியை அமைத்து தரவேண்டும்.