ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் சில இடங்களில் வாய்க்கால் இன்றி கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேவையான பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?