திருச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் எஸ்.பி.ஐ. சாலையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் சாலையோரம் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.