திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

Update: 2026-01-18 10:45 GMT

திருச்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த மூடி சேதம் அடைந்து பாதாள சாக்கடை திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்