திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அய்யப்ப நகர் இலுப்பூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காமலேயே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.