வடக்குதாமரைகுளம் தெற்கு தெருவில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.