மூங்கில்துறைப்பட்டு காமராஜர் தெருவில் கழிவுநீர் கால்வாய் திறந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.