சங்கராபுரம் அருகே நரியந்தல் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எதிரே உள்ள வளைவில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவுநீரில் வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வடித்து செல்லும் வகையில் கால்வாய் அமைப்பதோடு, தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.