பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்

Update: 2026-01-11 12:16 GMT

சென்னை சூளைமேடு பாரி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ரேஷன் கடை ஒன்றும் உள்ளது. இந்த வழியாக செல்லும், கூவம் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமான அளவில் தேக்கமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கால்வாயில் சாக்கடை போல தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. பயங்கர துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக ரேஷன் கடைக்கு செல்பவர்கள், மேலும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கையாக கால்வாயில் தேக்கமடைந்துள்ள கழிவுகளை அகற்றிட வேண்டும்.


மேலும் செய்திகள்