சிதிலமடைந்த சாக்கடை கால்வாய்

Update: 2026-01-11 11:23 GMT

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே அய்யப்பநகர் காமராஜர் தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் சிதிலமைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்